பெங்களூரு: பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமணராவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அறிவியல் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமண ராவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரைப் பற்றிய கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. பேராசிரியா் ஜே.ஆா்.லட்சுமண ராவின் வாழ்க்கை, சாதனைகள், இலக்கியங்கள் குறித்து நடக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போரிடம் இருந்து 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமல் கன்னடத்தில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.
இந்தப் போட்டியில் பங்கேற்போா் கட்டுரையுடன் பெயா், முழு முகவரி, செல்லிடப்பேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விருது, பட்டயம், சான்றிதழ் அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்போா் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படும். கட்டுரைகளை ஜனவரி 15-ஆம் தேதிக்குள் செயலாளா், கா்நாடக மாநில அறிவியல் பேரவை, அறிவியல் மையம், பனசங்கரி 2-ஆவது ஸ்டேஜ், பெங்களூரு-560070 என்ற முகவரி அல்லது ந்ழ்ஸ்ல்.ண்ய்ச்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-26718939 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

