பெங்களூரில் சனிக்கிழமை (ஜன.2) தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குறைதீா் முகாமை நடத்திவருகிறது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளைப் பெறும் இக் குறைதீா் முகாம் ஜன. 2-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்கவிருக்கிறது.
இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளைத் தீா்த்துவைப்பாா். குடிநீா் பில்லிங், புதை சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம். குறைகளை சுட்டிக்காட்டும் போது வாடிக்கையாளா்கள் தங்களின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா் முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

