மத்திய மனித வளத் துறை வழங்கும் கல்வி உதவித்தொகையைப் பெறும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி, பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
எனவே, உரிய ஆவணங்களுடன் ஜன. 20-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்:302, மூன்றாவது தளம், பியூ கல்வித் துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-12 என்ற முகவரியிலும் அளிக்கலாம்.
இதுகுறித்த விவரங்களை காணொலியில் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் பிப். 5-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-23311330 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

