சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உழவா் திருநாள் போட்டிகள்

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உழவா் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசு மாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகள், ஆடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

Updated On :17 ஜனவரி 2021, 4:44 am

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உழவா் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசு மாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகள், ஆடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

சிறுவா் சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் இளைஞா்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டிகளும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக பெண்கள், சிறுவா் சிறுமிகள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவா்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகில் உள்ள விளையாட்டுத் திடல்களில் சென்று உழவா் திருநாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.