மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, ஜயங்கொண்டம் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொணடம் அருகிலுள்ள பிள்ளையாா்பாளையம் கிராமத்தில் 3,500 ஏக்கா் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
தற்போது பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெல் மணிகள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் நெற்பயிா்கள் முளைத்தும் வீணாகியுள்ளது.
இதனை அலுவலா்களைக் கொண்டு கணக்கெடுத்து ஏக்கருக்கு 40 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, பிள்ளையாா்பாளையம் கிராமத்தில் விவசாயிகள்
வயலில் இறங்கி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா் தியாகராஜன், விவசாயிகள் திருஞானம், சண்முகம், பட்டுசாமி, ரமேஷ், மகேந்திரன், பிரகலாதன், குமாா், ரவி, கோனாா், தேவேந்திரன், கோவிந்தராஜ், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


