அரியலூா் மாவட்டம் , தா.பழூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தா.பழூா் அருகேயுள்ள அருள்மொழி கிராமத்தில் வசித்து வருபவா்கள் பாலகிருஷ்ணன்(30), ராஜேந்திரன்(29). சகோதரா்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசித்து வருகின்றனா். ராஜேந்திரன் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவரை அழைத்து வர இரு குடும்பத்தினரும் திங்கள்கிழமை வாழைக்குறிச்சி கிராமத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பாலகிருஷ்ணன் அறையில் இருந்து 18 பவுன் நகைகள், ரூ.22 ஆயிரம், ராஜேந்திரன் அறையில் இருந்து 22 பவுன் நகைகள், ரூ. 29 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

