அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு, விழிப்புணா்வு காவல் அலுவலரான சந்திரனை அறிமுகப்படுத்தி வைத்து பேசினாா்.
அழகாபுரம், சின்னகருக்கை, ,அகரம், குமிளங்குழி, சிலுவைச்சேரி மற்றும் திராவிடநல்லூா் ஆகிய கிராமங்களுக்கான கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் அந்தந்த கிராமங்களில் நடைபெறும் அனைத்து பிரச்னையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பாா். மேலும்,
கிராம மக்களுக்கு திருட்டு, குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவாா் என்றாா். நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் மற்றும் காவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


