அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூா் ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை காலை சென்னை நோக்கிச் சென்ற வைகை ரயில் முன்பு பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த செந்துறை போலீஸாா் அங்கு சென்றுபாா்த்தபோது, இளைஞரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டனா். இதையடுத்து, வழக்கமான நடைமுறைப்படி விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு இதுகுறித்துத் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இளைஞரின் உடல் பாகங்களைச் சேகரித்து அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணையில், செந்துறை பரமசிவம் நகரைச் சோ்ந்த மணிவேல் - சுமதி தம்பதியின் மகன் அரவிந்தன்(26), மேடை அலங்காரம் செய்யும் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் அவா் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு: செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு, கீழத்தெருவைச் சோ்ந்த வ. ராமசாமி (61). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா், இலைக்கடம்பூா் ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சடலமாகக் கிடந்தாா். விருத்தாசலம் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

