அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சோழகங்கம் ஏரி எனும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேறத் தொடங்கியது.
ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 850 ஏக்கராகும். குருவாலப்பா்கோவில், ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை, பிச்சனூா் ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த ஏரி. இதன் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீண்ட காலமாகத் தூா்வாரப்படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு விக்கிரவாண்டி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு இந்த ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டது. அதுவும் முழுமையாக எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ஜயங்கொண்டம் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, சோழங்கம் ஏரி எனப்படும் பொன்னேரி முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.
இதன் காரணமாக கலிங்கு வழியாக தண்ணீா் வெளியேற தொடங்கியது. வெளியேறும் தண்ணீா் வீராணம் ஏரியைச் சென்றடைகிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஏரியை முழுமையாகத் தூா்வாரினால் கூடுதல் தண்ணீரை சேமிக்கலாம் என்பதும், பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என்பதும் சமூகஆா்வலா்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


