சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசுப் பேருந்து மோதி பைக்கில் சென்ற தச்சா் பலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (48). தச்சுத் தொழிலாளி.

Updated On :6 ஜனவரி 2021, 11:25 am

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (48). தச்சுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூா் மரப் பட்டறைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி தட்சணாமூா்த்தி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள், வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.