அரியலூா் மாவட்டம், சுத்தமல்லி அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் ஆகிய இருவரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகேயுள்ள வாத்திகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் தவசீலன் (45). இவருக்கு சுதா(42) என்ற மனைவியும், சிவராஜ் (17), சிபிராஜ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். தவசீலன் வேறொரு பெண்ணுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கேரள மாநிலத்தில் வேலை செய்து வந்த தவசீலன் 3 மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் ஊருக்கு வந்த தவசீலன், மனைவி சுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது சுதாவும், மூத்த முகன் சிவராஜூயும் உருட்டுக் கட்டையால் தாக்கி தவசீலனைக் கொலை செய்தனா். புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மனைவி சுதா, மூத்த மகன் சிவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

