சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவில் திருவிழாவில் கஞ்சி குடித்தவர்களுக்கு வாந்தி

கடலூர் மாவட்டம் கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாய்க்கிழமை நடந்த கஞ்சி கலையம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:30 pm

கடலூர் மாவட்டம் கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாய்க்கிழமை நடந்த கஞ்சி கலையம் எடுக்கும் விழாவில் வழங்கப்பட்ட கஞ்சியை சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

கஞ்சிக் கலையம் எடுக்கும் விழாவின் போது பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இதை வீட்டிற்கு எடுத்து வந்த ஜயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரத்தைச் சேர்ந்த மக்கள் உறவினர்களுக்கு வழங்கியும் தாங்களும் குடித்துள்ளனர். புதன்கிழமை காலை முதல் ஒவ்வொருவருக்காக வாந்தி பேதி ஏற்பட்டது. வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(28), கோவிந்தன்(30), சரோஜா(40), சுதா(24), கெüரி(14), ராணி(27), தெய்வானை(35), பிரேம்ராஜ்(15), ஆனந்தவள்ளி(35) உள்ளிட்ட 14 பேர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11 பேரும் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன் விசாரிக்கின்றார்.