அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ஊராட்சி பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கல்லங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்ப்செட் அமைப்பது, தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், மருதையாறு வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட நீர்வள ஆதாரத்துறை பொன்னாறு வாய்க்கால் சீரமைரப்புப் பணி நடவடிக்கையாக முட்டுவாஞ்சேரி பொன்னாறு கீழ் போக்கியை சீரமைக்க வெள்ளசேத நிதி ரூ. 2 லட்சம், மாவட்ட ஊராட்சி நிதி ரூ. 1 லட்சம் என ரூ. 3 லட்சம் ஒதுக்குவது, செந்துறை தாலுகா மருவத்தூர் ஊராட்சி சேடக்குடிக்காடு- மருவத்தூர் வரை 225 மீட்டருக்கு ரூ. 2,50,000 மதிப்பில் இரண்டடுக்கு தார்ச் சாலை அமைப்பது, கோடாலிக்கருப்பூர் ஏழுகண் மதகை சீரமைக்க வெள்ள சேத
நிதி ரூ. 2 லட்சம், மாவட்ட ஊராட்சி நிதி ரூ. 5 லட்சம், ஒன்றியப் பொதுநிதி ரூ. 3 லட்சம் என ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்வது, நீராதாரப் பணிக்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்த ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதை அங்கீகரிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தனபால், ராமஜெயம், பவானி, தேன்மொழி, அர்ச்சுனன், இந்திராகாந்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்துறை அஞ்சுகம், ஜயங்கொண்டம் சேகர், உதவித்திட்ட அலுவலர் பிரேமாவதி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

