சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரியலூரில் குறைதீர்க்கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:34 pm

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 23) நடைபெற உள்ளது.

இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் தாலுகா, அருங்கால் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகா வாரியங்காவல் கிராமத்திலும், செந்துறை தாலுகா பிலாக்குறிச்சியிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் உணவுப்பொருள் குறைத் தீர் கூட்டங்கள் நடைபெறுகிறது.

செந்துறை தாலுகாவிற்கு அரியலூர் பொதுவிநியோகத்திட்ட துணைப் பதிவாளரும், உடையார்பாளையம் தாலுகாவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரியலூர் மண்டல மேலாளரும், அரியலூர் தாலுகாவிற்கு அரியலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. கூட்டுறவுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்றத்  தலைவர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

எனவே பொதுமக்கள் உணவுப் பொருள் சம்பந்தமான

குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.