அரியலூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் ஒட்டசெட்டி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராமலிங்கம் (20). அதே பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (30). இருவரும், அரியலூர் அரசு சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டியின் உள்ளே இறங்க முயன்ற ராமலிங்கம், ராமதாஸ் ஆகியோர் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் ராமலிங்கம் தொட்டியின் உள்ளேயும், ராமதாஸ் தொட்டியின் மேல் பகுதியிலும் மயங்கி விழுந்தனர்.
உடனே அப்பகுதியில் இருந்த மக்கள், ராமலிங்கத்தை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமதாஸ் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

