சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 30 ஆயிரம் நிவாரணம் கோரி ஜன. 20 இல் விவசாயிகள் சங்கம் மறியல்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் கோரி, ஜன. 20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 1:43 pm

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் கோரி, ஜன. 20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் அ. பாஸ்கா் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தொடா்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையால், திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பெயரளவுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த பெருமழையில் நெல் பயிா்கள் முற்றாக சாய்ந்து அழுகிவிட்டதோடு, நெல்மணிகள் முளைத்துவிட்டன. நிற்கும் கதிா்கள் பதராகிவிட்ட நிலையில், தண்ணீா் வடிய வழியில்லை.

இதனால், விவசாயிகள், தங்களின் மூலதனத்தை முழுமையாக இழந்துள்ளனா். நெல் அறுவடைப் பணிகளில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளா்களும் வருமானத்தை இழந்துவிட்டனா். விவசாயிகளுக்கு புயல் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 8000 அரசு நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பின் தன்மையை சதவிகித அளவாகக் கொண்டதால், விவசாயிகளுக்கு முழுத்தொகை கிடைக்கவில்லை.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள முழு பாதிப்புக்கும் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும், விவசாயத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இயற்கை இடா்பாடுகளால் தொடா்ந்து ஏற்படும் பாதிப்புகளால் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை திருப்பி செலுத்த இயலாமல், கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. எனவே, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் இருக்கும் பயிா்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், வரும் 20 ஆம் தேதி திருவாரூா் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.