சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அத்திக்கடவு திட்டம் தற்போது திறப்பதற்கு உடன்பாடு இல்லை: அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

அத்திக்கடவை பொருத்தவரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதை திறப்பதற்கு உண்டான காலம் இப்பொழுது சரியாக இல்லை.

News image

<div class="paragraphs"><p>நாராயணசாமி நாயுடு திருஉருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் முத்துசாமி </p></div>

Updated On :6 பிப்ரவரி 2024, 6:36 pm

கோவை: தண்ணீர் இல்லாமல் அத்திக்கடவு திட்டத்தை திறப்பதற்கு தற்போது உடன்பாடு இல்லை என அமைச்சர் முத்துசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த வையம்பாளையத்தில் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,விவசாய சங்கத்தினர் ஆகியோர் நாராயணசாமி நாயுடு திருஉருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி,எந்த காலமாக இருந்தாலும் விவசாயிகளை பொருத்தவரை நாராயணசாமி நாயுடு தான் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையான ஒரு தலைவராக இருந்தார். தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதுமே தெரிந்தது. தன்னுடைய சிறு வயதிலிருந்து விவசாயத்திற்காக குரல் கொடுத்து பல சாதனைகளை செய்துள்ளார். நாராயணசாமி நாயுடு ஒரு வார்த்தை சொன்னால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் கட்டுப்பட்டவர்கள்.

முதல்வர் இரண்டு நாள்களுக்கு முன்பு அரசு சார்பில் அங்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அவர் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார். அவருடைய பிறந்த நாளான இன்று என்னுடைய வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடன்பாடு இல்லை

அத்திக்கடவு திட்டம் குறித்து தனியாக கூட்டமிட்டு செய்தியாளர்களிடம் விரிவாக பேசியுள்ளேன். அத்திக்கடவை பொருத்தவரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதை திறப்பதற்கு உண்டான காலம் இப்பொழுது சரியாக இல்லை. இதை அரசியல் ரீதியாக கொண்டு போய் உள்ளனர். ஆறு மோட்டர்கள் இயக்கும் அளவுக்கு தண்ணீர் கூடுதலாக வந்தவுடன் அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது 3 மோட்டார்கள் இயக்கும் அளவிற்கு தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அதை திறப்பதற்கு தற்போது உடன்பாடு இல்லை.விவசாயிகளை பாதிக்கிற மாதிரி புறவழிச்சாலை வழி சாலை திட்டம் இருக்காது என அவர் தெரிவித்தார்.