சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த டிச. 3 ஆம் தேதி அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.
இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிச.3 ஆம் தேதி அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற டிச.17 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக்கட்டணத்தில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.
பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


