சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி: முதல்வர் வழங்கினார்

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.21.40 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

News image

<div class="paragraphs"><p>பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.21.40 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.</p></div>

Updated On :15 டிசம்பர் 2023, 3:41 pm

சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.21.40 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள்,வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாநில முகமையாக செயல்பட்டு வருகிறது. இக்கழகமானது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக, 2023-24 ஆம் நிதியாண்டில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக,7 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், மீதமுள்ள 93 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் அன்னை தெரசா வளாக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், அமைச்சர் பெருமக்களால் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை,ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்கு கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் கா.காஜா முகைதீன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.