சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அட அப்படியா!

உலகம் முழுவதும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் அன்னாசிப் பழங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹவாய்த் தீவில் இருந்துதான் வருகிறது.

Updated On :21 ஏப்ரல் 2013, 9:03 pm

உலகம் முழுவதும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் அன்னாசிப் பழங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹவாய்த் தீவில் இருந்துதான் வருகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் நூறு கோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

கரையான் புற்றுகள் உள்ள இடத்தில் பூமிக்கடியில் உலோகத் தாதுக்கள் இருக்கும் என்று 6-ம் நூற்றாண்டில் வராக மிகிரர் எழுதிய "பிருஹத் சம்ஹிதை' எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

கோவாவில் ஒரு சாலையின் பெயர் ஜூன். மற்றொரு சாலையின் பெயர் ஆகஸ்டு 15.

63 சத்துக்கள் நிறைந்த ஒரே கீரை அகத்திக்கீரைதான்.

1870-ம் ஆண்டு முதல்தான் கிறிஸ்துமஸ் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தது அமெரிக்கா.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தேஸ்வரரைச் சேர்ந்த பிரஜேஸ் குமார் கார்க் என்பவர் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சோப்புகளை சேகரித்து வைத்துள்ளார். விதவித நறுமணம், அளவு, நிறங்கள் கொண்ட 5000-க்கும் மேற்பட்ட சோப்புகள் அவர் சேகரிப்பில் உள்ளன.