கிங்பேர்
கிரிக்கெட்டில் "கிங்பேர்' என்று ஒரு சொற்றொடர் உண்டு. இரண்டு இன்னிங்ஸிலும் முதல் பந்திலேயே ஒரு பாஸ்ட்மேன் அவுட்டாகி விட்டால் அந்த சம்பவத்தை "கிங்பேர்' என்கிறார்கள்.
திருமணப் பரிசு
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்துக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு காந்தியடிகள் அளித்த பரிசு என்ன தெரியுமா? தானே செய்த மேஜை விரிப்பு.
கண்ணு... புள்ள... காலு
முத்தையன் என்ற ஒரு விவசாயி தனது தோட்டத்தில் உழுது கொண்டிருந்தான். மழை பெய்ததால் மண் நன்கு கிளறிவிடப்பட்டு நாற்று நடுவதற்கு பதமாக இருந்தது.
அப்போது அந்த வழியாக மூன்று பெண்கள் வந்தார்கள். அதில் ஒருத்தி இந்த மண் வளத்தைப் பார்த்து,""இந்த மண்ணுக்கு கண்ணு வச்சா நல்லா வரும்''என்றாள்.
இரண்டாவது ஒருத்தி,""சே...சே...புள்ள வச்சா நல்லா வரும்''னு சொன்னா!
""அட போங்கடி, இதுல காலு வெச்சோம்னா பணம் கொட்டும்டி!''
முத்தையன் ஒன்றும் புரியாமல் விழித்தான். அவனுக்கு வேலையே ஓடவில்லை. ஒருத்தி கண்ணு வெக்கணும்றா, அடுத்தவ புள்ள வைக்கணும்றா, மூணாவது பொம்பள காலு வெக்கணும்றா...என்ன கண்றாவி...மண்ணுல கண்ணு, புள்ள, காலு எல்லாமா வைப்பாங்க?
சந்தேகத்தோடு வீட்டுக்கு வந்தவன் தனது தாயிடம் கேட்டான்.
""அட மக்குப்பயலே! நீ எல்லாம் என்னடா விவசாயி? கண்ணுன்னா வாழைக்கண்ணு, புள்ளன்னா தென்னம்புள்ள, காலுன்னா வெத்தல கொடிக் காலுன்னு அர்த்தம் டா! என்னடா விவசாய படிப்பு படிச்சி கிழிச்ச? கைய, கால கழுவிட்டு சோறு தின்ன வாடா!''என்று விளக்கம் சொன்னான்.
வலையில் சிக்க வேண்டியது...
50 வயதுள்ள ஒருவர் திருவாரூருக்கு அருகிலுள்ள விசலூர் கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றில் வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். ஆறு செ.மீ. நீளமுள்ள மீன் துள்ளி எழுந்து வாயை பிளந்துகொண்டிருந்த மீனவரின் வாயில் சிக்கிக்கொண்டது.
மூச்சுவிட திணறிய அவருடைய வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே கிராமவாசிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
மருத்துவ குழு பரிசோதித்து கிடைத்த உபகரணங்களைக் கொண்டு மீனின் வாலைக் கண்டுபிடித்து மீனை உயிருடன் இழுத்தனர். இல்லையெனில் அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தீவு
ஐரோப்பியர்கள் 1722-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்ததால் அத்தீவுக்கு ஈஸ்டர் என்று பெயர் ஏற்பட்டது.
புதுமனை புகுவிழா
ஐரோப்பியரிடையே புது வீட்டிற்கு நடத்தப்படும் புதுமனை புகும் விழா ஸ்காட்லாந்தில் தோன்றியது. பழைய வீட்டின் அடுப்பிலிருந்து தணல் எடுக்கப்பட்டு புது வீட்டில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் இந்தப் பழக்கம் மற்றவரிடையேயும் பரவியது.
அப்படியென்றால் என்ன?
அப்பிக் கல்ட்சர் (Apiculture) என்றால் வணிக முறையில் தேனீயை வளர்த்து தேனை சேகரிக்கும் முறையாகும்.
ஆர்னித்தாலஜி (Ornithology) என்பது பறவைகளைப் பற்றி ஆராயும் முறையாகும்.
ஆரலஜி (Orology) என்றால் மலைகளைப் பற்றி ஆராயும் துறைக்கான அறிவியல் பெயராகும்.
ஹார்ட்டிகல்ச்சர் (Horticulture) என்பது தோட்டக்கலை முறைக்குரிய அறிவியல் பெயராகும்.
ஆர்த்தோகிராபி (Orthography) என்பது சரியான எழுத்து இலக்கண முறையைக் குறிப்பதாகும்.
டாக்ஸிகாலஜி (Toxicology) என்றால் நஞ்சும் அதன் விளைவுகளைப் பற்றிப் படிப்பதாகும்.
பெட்ராலஜி (Petrology) என்பது பாறைகள் அவற்றில் தாதுப் பொருள்களின் கூட்டமைப்பு, படிக அமைப்பு, தோற்றம் பற்றிய ஆய்வுக் கல்வியாகும்.
கிராபோலஜி (Graphology) என்பது கையெழுத்தையும், அதனை எழுதுபவரின் குணநலன்களையும் பற்றி ஆய்ந்து அறிவதாகும்.
என்ட்டமாலஜி (Entomology) என்பது பூச்சிகளைப் பற்றி ஆராயும் துறைக்கான அறிவியல் பெயர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

