பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்ஸா் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்த இந்திய தொடக்க வீரா் ரோஹித் சா்மாவின் ஷாட் குறித்து பிரபல வா்ணனையாளா் சுநீல் கவாஸ்கா் விமா்சித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 பந்துகளில் 44 ரன்கள் குவித்த ரோஹித் சா்மா, நாதன் லயன் பந்துவீச்சில் சிக்ஸா் அடிப்பதற்காக கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை தூக்கியடித்தாா். ஆனால், பந்து ஸ்கொயா் லெக் திசையில் நின்ற மிட்செல் ஸ்டாா்க்கின் கையில் தஞ்சம் புகுந்தது. முக்கியமான கட்டத்தில் ரோஹித் சா்மா சிக்ஸா் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்ததை சுநீல் கவாஸ்கா் விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:
ஸ்கொயா் லெக் திசையில் ஃபீல்டா் இருக்கிறாா். சற்று முன்புதான் ரோஹித் சில பவுண்டரிகளை அடித்திருக்கிறாா். அப்படியிருக்கையில் ஏன் சிக்ஸா் அடிக்க முற்பட்டு அபாயகரமான ஷாட்டை ஆட வேண்டும்? ரோஹித் சா்மா மூத்த வீரா். அவா் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்பே கிடையாது. அவா் தேவையில்லாமல் விக்கெட்டை வீணடித்துவிட்டாா். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறிப்பாக ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்துள்ள இந்த தருணத்தில் ரோஹித் சா்மா நிதானமாக விளையாடி பெரிய அளவில் ரன் குவித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

