சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடி

"" இந்தக் குளத்துப் படிக்கட்டு வழுக்குமா?''"" வழுக்கும்..... "பாசி' பிள்!''

News image
Updated On :16 ஜனவரி 2021, 11:30 am

"" இந்தக் குளத்துப் படிக்கட்டு வழுக்குமா?''
"" வழுக்கும்..... "பாசி' பிள்!''

கோ.வினோத்,
கிருஷ்ணாபுரம்.



""எங்க அங்கிளுக்கு நிறைய்ய போன் வருதுடா!''
""அவ்வளவு போனை வெச்சுக்கிட்டு அவரு என்ன செய்வாரு?''


குமாரி கே.விஜயலட்சுமி.
திருப்பத்தூர்.

சாக்ஸிலே பெரிய்ய ஓட்டை இருந்திச்சு!''
""உடனே வாங்கின கடையிலே போய் மாத்திக்க வேண்டியதுதானே!''
""போனேனே,..... அந்த ஓட்டை 
இல்லேன்னா காலை நுழைக்க முடியாதாம்!''


எம்.ஏ.நிவேதா,
அசூர் திருச்சிராப்பள்ளி, -  620015


""சுத்தமான பசும்பால் வேணும்னா என்ன செய்யணும்?''
""பசுமாட்டை நல்லா குளிப்பாட்டணும்!''

ஆர் . சுப்பு, 20,
திருத்தங்கல் - 626130

""என்னோட முகம் தெரியறா மாதிரி கண்ணாடி வாங்கி வரச்சொன்னேனே,.... வாங்கிட்டு வந்தியா?''
""கிடைக்கலீங்க,....எல்லாக் கடையிலேயும் பார்த்துட்டேன்!.... எல்லாக் கண்ணாடியிலேயும் என் முகம்தான் தெரிஞ்சுது!''

உமர்,
கடையநல்லூர் - 627751.

"மழைத்தண்ணீர் ஏன் வீட்டுக்குள்ளே வந்தது சொல் பார்க்கலாம்?"
"அந்த ஏரியாவ தன்னோட ஏரியான்னு பாக்க வந்திருக்கும்!"

செ.ஆசைத்தம்பி,  
சேலம்.