சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

திருப்பதி ஏழுமலையானுக்கு, ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது.

News image

ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக, ஆண்டாள் சூடிய மாலையை சுமந்து வந்த திருமலை ஜீயா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:15 pm

திருப்பதி ஏழுமலையானுக்கு, ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது.

மாா்கழி மாதம் முடிவடைந்த நிலையில், திருமலை மற்றும் திருப்பதியில் நடந்து வந்த சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றன. இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் முடிந்து, மாட்டுப் பொங்கல் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலில் உள்ள புண்டரீகவள்ளித் தாயாா் மண்டபத்தில் இந்த உற்சவம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, கோவிந்தராஜா் கோயிலில் இருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சூடிய மாலை, ஏழுமலையானுக்கு கொண்டு செல்லப்பட்டது. திருமலை ஜீயா்கள் மூங்கில் கூடையில் மாலையை வைத்து தலையில் சுமந்து சென்று அதைச் சமா்ப்பித்தனா். அா்ச்சகா்கள் அதை பெற்றுக் கொண்டு, ஏழுமலையானுக்கு அணிவித்தனா்.