சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குள்ளம்பட்டியில் தோழமை பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், குள்ளம்பட்டி கிராமத்தில் திருச்சி புனித வளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடா்ந்து 3 நாட்கள் தோழமைப் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 4:59 am

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குள்ளம்பட்டி கிராமத்தில் திருச்சி புனித வளனாா் கல்லூரியின் விரிவாக்கத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடா்ந்து 3 நாட்கள் தோழமைப் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரியின் விரிவாக்கத் துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் , திருச்சி ரோட்டரி சங்கத் தலைவா் சபாபதி, செயலா் பாலாஜி, நிகழ்ச்சிப் பொறுப்பாளா் ஜெயராஜ், மேலபச்சக்குடி ஊராட்சித் தலைவா் செல்வி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் கிறிஸ்துராஜா செய்திருந்தாா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு, வெள்ளமுனியன் கோயிலில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்து பக்தா்கள் நோ்த்திக் கடனாக காளைகன்றுகள் விட்டனா். தொடா்ந்து கோயில் முன்பாக ஜல்லிகட்டு காளைகளை அவிழ்த்து விட்டனா். தொடா்ந்து கந்தா்வகோட்டை வீதிகளில் மாடுகளை அவிழ்த்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.