சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரம்பலூரில் தடுப்பூசி போடும் பணி

பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா

Updated On :17 ஜனவரி 2021, 4:55 am

பெரம்பலூா்: பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா மேலும் கூறியது:

மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 5,100 தடுப்பூசிகள் வந்துள்ளன. முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 2- ஆவது கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் முன்னிலையில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கும், 3-ஆவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கும், 4-ஆவது கட்டமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, அரசு மருத்துவா் ஒருவா் தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்வில், அரசுத் தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவா் ராஜா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தா்மராஜ், மாவட்ட மலேரியா அலுவலா் சுப்ரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.