மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
ம.பி.யின் ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
படுகாயமடைந்தவர்கள் போபால் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் பரவத் தொடங்கியதால் அங்குப் பதற்றம் நிலவி வருகின்றது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை மத்தியப் பிரதேச அரசு நியமித்துள்ளது.

<div class="paragraphs"><p>டெய்லர் ஸ்விப்ட்</p></div> - <div class="paragraphs"><p>AP/Julio Cortez</p></div>
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


