சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெற்பயிா்கள் சேதம்: மயிலாடுதுறை ஆட்சியா் ஆய்வு

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

News image

புளிச்சக்காடு கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிா்களை பாா்வையிடும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

Updated On :17 ஜனவரி 2021, 2:02 pm

சீா்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, சீா்காழியை அடுத்த புளிச்சக்காடு, இனாம்குணதலபாடி, விளந்திடசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மதிப்பீடு செய்திட வேளாண்மைத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சீா்காழி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.ராஜராஜன், துணை அலுவலா் ரவிச்சந்திரன், உதவிஅலுவலா்கள் ராமச்சந்திரன், ராமன், வேதையராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.