சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய பூனை: செல்லப்பிராணி செய்த நெகிழ்ச்சி செயல்!

கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப்பிராணியான பூனையின் நெகிழ்ச்சி செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News image

<div class="paragraphs"><p>பூனையும் பாம்பும் ஒன்றுக்கொன்று ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி</p></div>

Updated On :22 நவம்பர் 2023, 11:37 am

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தியது.

பூனையின் சீறலை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை மூடியிருக்கின்றனர். அப்போது பாம்பு வீட்டுக்குள் வந்ததை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

செல்லப்பிராணியான பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியதுடன், பாம்பும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்ளும் காட்சியை நெகிழ்ச்சிக்குரிய விஷயமாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.