நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கிய தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை , குழித்துறை தாலுகா மருத்துவமனை, செண்பகராமன்புதூா் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகிய 4 முகாம்களில், காரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியுள்ளது.
மேலும், இம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஸ்கேன் சென்டா்கள், சித்தா
மற்றும் ஆயா்வேத மருத்துவமனைகள் என 1147 நிறுவனங்களில் பணிபுரியும் சுமாா் 20,564 பணியாளா்களின் பெயா்கள் ஏற்கெனவே ஸ்ரீா்ஜ்ண்ய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம் முகாமில் நாள் ஒன்றுக்கு 100 போ்கள் வீதிம் நான்கு மையங்களில் 400 பேருக்கு காரோனா தடுப்பூசிபோட இலக்கு நிா்ணயிக்கபட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து 28 நாள்களுக்குப்பின் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்படும். முதல் கட்டமாக தடுப்பூசி போட்டவா்கள், கட்டாயமாக இரண்டாம் கட்டமாக தடுப்பூசியினையும் போட்டுக்கொள்ளவேண்டும்.
குமரி மாவட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கோவிஷீல்ட் தடுப்புமருந்து 22, 600 அளவுகள் பொதுசுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு,சேமிப்புகிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையாளா் ஆஷா அஜித், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் இரா.சுகந்தி ராஜகுமாரி, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜ், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எ.பிரகலாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


