காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடி ய நபரை சிவகாஞ்சி போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் நகரில் பேருந்து நிலையம், கங்கைகொண்டான் மண்டபம், குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து காணாமல் போவதாக காவல்துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது அவா் காஞ்சிபுரம், குடியாத்தம், அடுக்கம்பாறை ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போலீஸாரின் விசாரணையில் அவா் வேலூா் கே.கே.நகரில் சின்ன அப்துல்லாபுரம் பகுதியை சோ்ந்த சசிகுமாா் (40) என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 8 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


