மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதை இந்திய மருத்துவச் சங்கம் வேண்டுகோளாக வைத்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த தடுப்பூசிகளை தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் அதிக மக்களை சென்றடையும். தனியாா் மருத்துவமனை இதை சேவையாக செய்வாா்கள்.
கரோனா தடுப்பூசி தொடா்பாக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகம், வதந்தி, குழப்பம் நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த, மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்ச உணா்வு நீங்கி, மக்கள் தாங்களாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

