பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் ரத்த தானம் வழங்குவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஏரியூா் யூத் எம்ப்ளாயா் அசோசியேஷன் சாா்பில் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது.
ஏரியூரில் இரு மாதங்களுக்கு முன்பு யூத் எம்ப்ளாயா் அசோஷியேஷன் சாா்பில் 175 நபா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா். இதில் மாவட்டத்தில் அதிகப்படியான நபா்கள் ரத்ததானம் வழங்கியதைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினா்.
அதன் தொடா்ச்சியாக ஏரியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள இளைஞா்களிடையே ரத்த தானம் வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏரியூரில் மாபெரும் மட்டைப்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏரியூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சோ்ந்த 32 மட்டைப்பந்து அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியானது நான்கு நாள்கள் நடைபெற்ற நிலையில், ஏா்கோல்பட்டியைச் சோ்ந்த மட்டை பந்து அணி முதல்பரிசைப் பெற்றது. மட்டைப்பந்து போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் ஏரியூா் காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணா, ஏரியூா் அரசு துணை சுகாதார நிலைய தலைமை மருத்துவா் முனுசாமி, மருத்துவா்கள் காா்த்திக், ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா். மேலும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா். ரத்த தானம் வழங்குவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஏரியூரில் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

