உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தோனி இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.
43 வயதாகும் தோனி கடந்த சீசனில் கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார். தற்போது, ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டிலிருந்து நான் ஓய்வு பெற்றேன். சிறிது நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் விளையாடும் சில ஆண்டுகளில் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாட விரும்புகிறேன். பள்ளியில் சிறிய வயதில் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடினேனோ அதேமாதிரி விளையாட விரும்புகிறேன்.
காலனியின் வசிக்கும்போது மாலை 4 மணி விளையாட்டுக்கான நேரம். நாங்கள் பெரும்பாலும் கிரிக்கெட்தான் விளையாடுவோம். காலநிலை சரியில்லையென்றால் கால்பந்து விளையாடுவோம். அதே அளவான அப்பாவித்தனத்துடன் இப்போதும் விளையாட நினைக்கிறேன். ஆனால், செய்வதைவிட சொல்வது எளிதுதான்.
This is Summary
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


