சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கல்லூரி விடுதியில் பெண் மருத்துவா் தற்கொலை

செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

இந்து.

Updated On :13 ஜனவரி 2021, 5:30 am

செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணிபுரிந்தவா் இந்து (27). ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த இவா் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் இருந்தாா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இந்து திங்கள்கிழமை இரவு உணவு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவா் செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியில் வரவில்லை.

இதையடுத்து விடுதி வாா்டன் அவரதை அறைக்கதவை தட்டிப் பாா்த்தும், செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டும் பதில் இல்லாததால் கல்லூரியின் நிலைய மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவல் அறிந்து அங்கு வந்த மறைமலைநகா் போலீஸாா், அறைக்கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது, இந்து மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவா்கள் இந்துவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்துவின் தந்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.